பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்

Tuesday, April 23rd, 2024 at 11:23 (SLT)

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி மலேசியாவில் சோகம்

Tuesday, April 23rd, 2024 at 11:16 (SLT)

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

Tuesday, April 23rd, 2024 at 11:08 (SLT)

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு மட்டும் 13 கோடி செலவு

Tuesday, April 23rd, 2024 at 9:18 (SLT)

கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்காக 13 கோடியே இருபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இலவச அரிசிக்கு பணம் அறவிட்ட கிராமசேவக உத்தியோகத்தர்

Tuesday, April 23rd, 2024 at 9:15 (SLT)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ் பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்படுவதாக திம்புலாகல மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீன உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் யேர்மனியில் கைது

Tuesday, April 23rd, 2024 at 9:05 (SLT)

யேர்மனியில் உளவு பார்த்ததாக மூன்று யேர்மனிக் குடிமக்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக யேர்மனியின் பெடரல் சட்டவாளர் அலுவலகம் தெரிவித்தது. சீனாவின் கடல்சார் சக்தியை விரிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் ஆராய்ச்சி திட்டங்களில் மூவரும் ஈடுபட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது : ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம்

Tuesday, April 23rd, 2024 at 7:34 (SLT)

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மன்னர் சார்ல்ஸ் – கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் நிலைப்பாடு

Tuesday, April 23rd, 2024 at 7:28 (SLT)

மன்னர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்தமைக்கு, இளவரசர்கள் வில்லியம்(William) மற்றும் ஹரி (Harry), எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகளை அரச தரப்பு நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய பிரதமர் மீண்டும் சூளுரை

Tuesday, April 23rd, 2024 at 7:23 (SLT)

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார்.ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரிதமர் ரிஷி,

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Tuesday, April 23rd, 2024 at 7:18 (SLT)

மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு பலஸ்தீனக் குழந்தை சாவு : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை

Monday, April 22nd, 2024 at 10:47 (SLT)

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பசிலின் மல்வானை இல்லம், மாடுகளின் கூடாரமாக மாறப்போகிறதா..?

Monday, April 22nd, 2024 at 10:39 (SLT)

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாற்ற அனுமதி வழங்குமாறு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தி.மு.க ஆட்சியில் பொலிஸ் காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:எடப்பாடி பழனிசாமி

Monday, April 22nd, 2024 at 10:34 (SLT)

தி.மு.க ஆட்சியில் பொலிஸ்காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யுக்திய நடவடிக்கையயில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை

Monday, April 22nd, 2024 at 7:12 (SLT)

யுக்திய நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அடுத்த மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்துவதாக ஜே. வி. பி உறுதியளித்துள்ளமை நகைப்புக்குரியது : பிரசன்ன ரணதுங்க

Monday, April 22nd, 2024 at 7:04 (SLT)

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>