Header image alt text

எதிர்வரும் செவ்வாய் கிழமை (02) காலை 6.30 மணி முதல் வேலை பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு சட்ட ரீதியில் நியாயம் கிடைக்காததால், மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விசாரணையின் பின்னர் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தனது தந்தை கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். Read more

அரசாங்கம் இந்தியாவின் கைபொம்மையாகச் செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்த திட்டங்களும் இல்லை. வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளனர். Read more

தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ரூனெயளர் இலங்கை நட்புறவின் அடையாளமாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை 6 மாடிகளைக் கொண்டுள்ளதுடன் 640 படுக்கைகள் 6 அறுவை சிகிச்சை அரங்குகள்இ அவசர சிகிச்சை பிரிவுகள்இ தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வகங்கள் சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள் சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வைத்திய வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.  அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கி முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன்இ நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் பதற்றநிலை ஏற்பட்டது. Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை லண்டன் Harrow West Conservative Association
10 Village Way,
Rayners Lane,
Pinner
*HA5 5AF. என்னும் முகவரியில் நடைபெற்றது.

Read more

தோழர் RR அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று (25.03.2024) செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பு சிரமதானப் பணி இடம்பெற்றது. Read more