“ஜூலியனுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது”

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார்.

தனி நபரின் மாதாந்த வாழ்க்கை செலவு அதிகரிப்பு

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு சராசரியாக 17,014 ரூபாயாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

19,620 இலங்கையர்கள் நாடு திரும்ப இதுதான் சரியான நேரம்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்கள் மூவருக்கு சிறை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை

பொதுபல சேனா பொதுச் செயலாளர் குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா-இலங்கைக்கு இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (26) சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

ராஜிவ் காந்தி கொலை: மூவருக்கு கடவுச்சீட்டு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

’அரகலய’வால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை துரிதப்படுத்தவும்

2022 மே 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ‘அரகலய’ போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் நட்டஈடு அலுவலகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளி அரவிந்தன் கைது

முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்கு

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்துள்ளார் .