search icon
என் மலர்tooltip icon
    • முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு.
    • சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

    இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாயாருக்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து தாயார் பவானி விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் மனுவை திரும்ப பெறவும் ரேவண்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமின் பெறக்கூடிய பிரிவுகள்தான் என நீதிமன்றம் கூறிய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

    அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.

    இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி மற்றும் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

    இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

    03.05.2024 முதல் 07.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

    வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

    இன்று முதல் 6-ந்தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    03.05.2024 முதல் 06.05.2024 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    • ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
    • ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2400 பிராசஸர், 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S24 மாடலின் புதிய 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும்.

    கேலக்ஸி S24 அம்சங்கள்:

    6.2 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

    1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    சாம்சங் எக்சைனோஸ் 2400 பிராசஸர்

    எக்ஸ்-க்ளிப்ஸ் 940 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS

    12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS

    12MP செல்ஃபி கேமரா

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்யருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை விராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      

    • உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார்.

    உத்தரபிரதேசம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
    • நடிகர் பவன் கல்யாணின் ‘பீமலா நாயக்’கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னேரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.

    அரிய இசைக்கருவியான 'கின்னரா'வை புதுப்பித்ததற்காக, தர்ஷனம் மொகிலையாவுக்கு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்த தர்ஷன் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒரு வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதன் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்-மந்திரி தெரிவித்தார்.

    இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் மொகிலையா வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து மொகிலையா கூறும் போது, "எனது மகன்களில் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். எனக்கும், என் மகனுக்கும் மருந்துக்கு மட்டும் மாதம் 7,000 ரூபாய் தேவைப்படுகிறது. பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர செலவுகள் உள்ளன. அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

    மேலும் ரூ.1 கோடி மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் 600 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்குவதாக அரசு கூறியது. ஆனால் அந்த ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றார்.

    முன்னதாக, நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    வேலையில் ஏற்படும் சிரமங்கள், குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில மனக்கசப்புகள், படிப்பிலும் மற்ற நண்பர்களிடம் ஏற்படும் சிறு - சிறு சண்டைகள், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் என கூறி கொண்டே போகலாம். இந்த மாதிரியான காரணங்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபம் என்பது சாதாரணமாக வந்து விடுகிறது.

    சில நேரங்களில் கோபம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருகிறது. அதில், சிலர் மரணமும் அடைகின்றனர்.

    இதுபோன்ற உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, சில நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான, உணர்ச்சிகரமான அனுபவங்கள், இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்பது குறித்து ஆய்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கின.

    இந்த ஆய்வில் கோபத்தின் காரணமாக பதட்டமான நிலை, சோகமான உணர்வுகளால் இதய நோய் அதிகமாக உருவாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.


    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கோபத்தின் சிறிய வெடிப்புகள் கூட இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தூண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, 8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது தான். எனவே, கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    • தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
    • வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது. இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

    வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து நாளை(சனிக்கிழமை) தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக போலீசாரிடம் அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்த்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் நெய்வேலி டி.எஸ்.பி. சபியுல்லா தெரிவித்துள்ளார்.

    ×